அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

2013-14 கல்வி ஆண்டில் மெடர்க் முறை ஆங்கில பள்ளிகள் அனைத்திலும் அரசு நிர்ணயித்த கவ்விக் கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடமிருந்து பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

News image
Updated On :3 ஜூன் 2013, 11:59 am

G.Sundararaj

2013-14 கல்வி ஆண்டில் மெடர்க் முறை ஆங்கில பள்ளிகள் அனைத்திலும் அரசு நிர்ணயித்த கவ்விக் கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடமிருந்து பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் நகர்க்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் நகர்க்குழுக் கூட்டம்  நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சி.வெங்கடேசன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகர்க்குழு உறுப்பினர்கள் ராஜா, சித்ரா, அமுதா, மல்லிகா, மாரியப்பன், சங்கமேஸ்வரன், பாண்டியன், முத்து உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசு ஒதுக்கீடான 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையை கடந்த ஆண்டு போல் இல்லாமல், இந்த ஆண்டு முழுவதுமாக மெட்ரிக் ஆங்கில பள்ளிகளில் நிரப்பிட கூடுதல் நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.