அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களின் விளைவாக, பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தற்காலிக பணிநீக்கம் செய்து, பல்கலைக்கழக நிர்வாகியாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ்ஸை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழகஅரசு நியமனம் செய்து. அவர் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகியா பொறுப்பேற்று பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தமிழகஅரசு உயர்கல்வித்துறை மூலம் தமிழக சட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.