அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இணையதளம் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு மையங்கள் விபரம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஹால்டிக்கட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விபரங்களை பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் விண்ணப்ப எண்

News image
Updated On :4 ஜூன் 2013, 3:15 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல், விவசாயம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஹால்டிக்கட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விபரங்களை பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் விண்ணப்ப எண், பிறந்த தேதி வருடம் அல்லது செல்போன் நம்பரை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7,8,9 தேதிகளில் அண்ணாமலைநகர், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய 7 மையங்களில் நடைபெறவுள்ளது. நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிக்கட் ஸ்பீட் போஸ்ட் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் விபரங்களை அருகாமையில் உள்ள பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மைய படிப்பு மையங்களில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள்: 04144- 238348, 238349 ஆகியவற்றை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என பதிவாளர் என்.பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.