அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரத்தில் சென்னை அடையாரைச் சேர்ந்த தொழிலதிபர் தற்கொலை!

சென்னை அடையார் சாஸ்திரிநகரில் 9-வது குறுக்குத்தெருவில் வசிப்பவர் தொழிலதிபர் எஸ்.ரவீந்திரன் (54). திங்கள்கிழமை சிதம்பரம் வந்த இவர் கீழரதவீதியில் உள்ள ராசி அடுக்கு மாடி

News image
Updated On :4 ஜூன் 2013, 11:15 am

G.Sundararaj

சிதம்பரம் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள நண்பர் வீட்டில் சென்னை அடையாரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அடையார் சாஸ்திரிநகரில் 9-வது குறுக்குத்தெருவில் வசிப்பவர் தொழிலதிபர் எஸ்.ரவீந்திரன் (54). திங்கள்கிழமை சிதம்பரம் வந்த இவர் கீழரதவீதியில் உள்ள ராசி அடுக்கு மாடி குடியிருப்பில் நண்பர் ராக்கப்பன் வீட்டில் யாரும் இல்லாததால் அவரது தம்பி அண்ணாமலையிடம் வீட்டு சாவியை பெற்று தங்கியுள்ளார். மாலை வரை வீடு திறக்கப்படாததால் அண்ணாமலை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரவீந்திரன் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் குடித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரவீந்திரன் தனது மகளை மருத்துவப் படிப்பில் சேர்க்க பணம் கிடைக்காததால் மனஉளச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.