அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விளை நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுக்க பாரதி யுவ பரிஷத் அமைப்பு கோரிக்கை

சிதம்பரம் தெற்குரதவீதியில் பாரதி யுவ பரிஷத் மாநில அமைப்பு செயல்வீரர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக்  கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர்

News image
Updated On :8 ஜூன் 2013, 1:36 pm

G.Sundararaj

விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களால் அபகரிக்கப்படுவதை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதி யு பரிஷத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிதம்பரம் தெற்குரதவீதியில் பாரதி யுவ பரிஷத் மாநில அமைப்பு செயல்வீரர்கள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக்  கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் பார்த்தீபன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சிலம்பரசன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நரேந்திரமோடியை பிரதமராக்க வேண்டும் என நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பொருளாளர் குருமூர்த்தி நன்றி கூறினார்.

கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு அலோபதி, ஹோமியோபதி, சித்தா போன்ற மருந்து கடைகளை திறக்க வேண்டும்; விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் புரோக்கர்களால் அபகரிக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டும்; கல்வி, வேலைவாய்ப்பில் சாதி வேறுபாடின்றி தகுதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு, தங்களது குடும்ப பாரம்பரியத்தை பற்றி தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.