சிதம்பரத்தை அருகே உள்ள ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (40). அதிமுக கிளைக்கழகச் செயலாளராக உள்ள இவர் இன்று காலை கடலூர் சாலையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று அவரது மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குமார் இறந்தார். தகவல் அறிந்த கிராம மக்கள் சாலையில் கூடியதால் சிதம்பரம்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.