அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நூறாவது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திருவள்ளுவர் மாவட்டம் நரசிங்கபுரம் வள்ளலார் வழிபாட்டு மன்ற ஆன்ம நேயக்குழுத்தினரின் நூறாவது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும், குருநாதர் திருவேங்கட சுவாமிகளின்

News image
Updated On :9 ஜூன் 2013, 11:06 am

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திருவள்ளுவர் மாவட்டம் நரசிங்கபுரம் வள்ளலார் வழிபாட்டு மன்ற ஆன்ம நேயக்குழுத்தினரின் நூறாவது திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும், குருநாதர் திருவேங்கட சுவாமிகளின் நூறாவது ஆண்டு மங்கல விழா இன்று நடைபெற்றது.

வள்ளலார் வழிபாட்டு குழுவினர் கடந்த ஜூன் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை பேரம்பாக்கம் வள்ளலார் கோயிலிலிருந்து பேருந்தில் புறப்பட்டு நெய்வேலி நடராஜர் கோயில், வடலூர், மேட்டுக்குப்பம், திருமுதுகன்றம், ராஜேந்திரபட்டினம், சோழத்தரம், கங்கை கொண்ட சோழபுரம், திருநாரையூர், கானாட்டுமுள்ளூர், மேலக்கடம்பூர், காட்டுமன்னார்கோயில், ஓமாம்புலியூர், திருக்கழிப்பாலை, திருவேட்களம், நல்லூர் பெருமணம் ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று சனிக்கிழமை இரவு வந்தடைந்தனர்.

சிதம்பரத்தில் வழிபாட்டுக்குழுவின் சிவனடியார்கள் இன்றூ காலை திருமுறைகளை தலையில் சுமந்து வீதிவலம் வந்தனர். பின்னர் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாசக முற்றோதல் செய்தனர். நடனப்பந்தலில் நூறு வயது பூர்த்தியடைந்த திருவேடங்கடசுவாமிகளுக்கு கனகாபிஷேகம் நடைபெற்றது. உ.கேதாரேஸ்வர தீட்சிதர் கனகாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பின்னர் மாகேஸ்வரபூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.எம்.டி.பிரம்மேச சிவாச்சாரியார், திருவையாறு வே.ரமணன், காஞ்சிபுரம் டாக்டர் வே.சந்திரசேகரன், காஞ்சி சிவனடியார் திருக்கூட்டச் செயலாளர் ஆ.பாலசுப்பிரமணியன், க.கன்னியப்பனார், கூவம் நால்வர் இறைபணி சங்கத் தலைவர் ச.மணிவாசகம், பி.கே.பக்தவச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.