அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாலை விபத்தில் அதிமுக கிளைச் செயலாளர் மரணம்: 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு

சிதம்பரம் அருகே தனியார் பஸ் ஒன்று மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற அதிமுக கிளைச் செயலாளர் மரணமடைந்தார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூடியதால் சுமார் 30 நிமிடங்கள் சிதம்பரம்-கடலூர்

News image
Updated On :9 ஜூன் 2013, 11:55 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே தனியார் பஸ் ஒன்று மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற அதிமுக கிளைச் செயலாளர் மரணமடைந்தார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூடியதால் சுமார் 30 நிமிடங்கள் சிதம்பரம்-கடலூர் சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரத்தை அருகே உள்ள ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (40). அதிமுக கிளைக்கழகச் செயலாளராக உள்ள இவர் இன்று காலை கடலூர் சாலையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று அவரது மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குமார் இறந்தார். தகவல் அறிந்த கிராம மக்கள் சாலையில் கூடியதால் சிதம்பரம்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.