சிறப்பு வாய்ந்த தில்லையில் (சிதம்பரத்தில்) சேக்கிழாரின் குருபூஜை தினமான ஜூன் 12-ம் தேதி வைகாசி பூசத்தில் அறுபத்து மூவர் உற்சவம் நடைபெறுகிறது. அறுபத்து மூவர் உற்சவம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது. பிரபலமான மயிலை கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் உற்சவமாகும். அடுத்து மேலும் சில கோயில்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு போன்ற இடங்களிலும் அறுபத்துமூவர் உற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் சேக்கிழார் பெருமானின் குருபூஜையான வைகாசி பூசத்தில் அறுபத்து மூவர் உத்சவம் நடைபெறுவது சிதம்பரத்தில் மட்டும்தான் என்றால் மிகையாகாது. அன்று அறுபத்து மூவரில் ஒருவரான நமிநந்தியடிகள் குருபூஜையும், அன்றே சேக்கிழாரும் முக்தி அடைந்தார் என்பதும் மேலும் சிறப்புக்குரியதாகும். அதுமட்டுமின்றி ஜூன் 12-ம் தேதி வைகாசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தில் சிதம்பரத்தை அடுத்த திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜையும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது என உ.வெங்கடேச தீட்சிதர் தெரிவித்துள்ளார்.