அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னையில் வள்ளலார் வசித்த வீட்டை அரசுடைமையாக்கி, அருங்காட்சியம் அமைக்க கோரிக்கை

இந்திய சுதந்திரத்திற்காக தனது சொத்துக்களை அனைத்தையும் இழந்த தியாகச் செம்மல் வ.உ.சி உருவம் பொறித்த நாணயத்தை மத்தியஅரசு வெளியிட வேண்டும். பிள்ளைமார், முதலியார் இனத்தவர்கள் 153

News image
Updated On :10 ஜூன் 2013, 11:50 am

G.Sundararaj

சென்னை ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் 37 ஆண்டுகள் வசித்து வந்த வள்ளலார் ராமலிங்க அடிகளார் வீட்டை அரசுடைமையாக்கி அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என வேளாளர், பிள்ளைமார், முதலியார் கூட்டமைப்பு தலைவரும், சினிமா படத் தயாரிப்பாளருமான கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:

இந்திய சுதந்திரத்திற்காக தனது சொத்துக்களை அனைத்தையும் இழந்த தியாகச் செம்மல் வ.உ.சி உருவம் பொறித்த நாணயத்தை மத்தியஅரசு வெளியிட வேண்டும். பிள்ளைமார், முதலியார் இனத்தவர்கள் 153 பிரிவுகளில் 2.25 கோடி பேர் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் ஏழை குடும்பத்தினராக வசித்து வருகின்றனர். தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இவர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் மேன்மை அடையக்கூடிய வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தவுள்ளோம். அதன் தொடக்கமாக திருச்சியில் வருகிற ஜூலை 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என கே.ராஜன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.