திருநாரையூரில் ஸ்ரீநம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை விழா!
திருமுறைகள் நமக்கு கிடைக்க காராணமாக இருந்தவர் நம்பியாண்டார் நம்பிகள். ஸ்ரீ பொல்லாப் பிள்ளையார் அருளால் தில்லையில் இருந்த திருமுறைகளை ஸ்ரீநடராஜப் பெருமானிடமிருந்து இருந்து பெற்று ராஜராஜ


காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள திருநாரையூர் ஸ்ரீபொல்லாப்பிள்ளையார் கோயிலில் ஸ்ரீநம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருமுறைகள் நமக்கு கிடைக்க காராணமாக இருந்தவர் நம்பியாண்டார் நம்பிகள். ஸ்ரீ பொல்லாப் பிள்ளையார் அருளால் தில்லையில் இருந்த திருமுறைகளை ஸ்ரீநடராஜப் பெருமானிடமிருந்து இருந்து பெற்று ராஜராஜ சோழன் வேண்டுகோளை ஏற்று தொகுத்து தந்தவர் ஸ்ரீநம்பியாண்டார் நம்பிகள்.
நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை ஆண்டு தோறும் வைகாசி புனர்பூசம் நட்சத்திரத்தில் திருநாரையூர் ஸ்ரீபொல்லாப்பிள்ளையார் கோயிலில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை காலை சிவனடியார்களின் சிவபூஜையுடன் தொடங்கியது. பின்னர் கணபதி ஹோமம், பொல்லாப்பிளையாருக்கு அபிஷேக ஆராதனை, நம்பியாண்டார் நம்பிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றன. மாலை மாகேஸ்வர பூஜையும், இரவு சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குருபூஜை விழாவில் பங்கேற்று தரிசித்தனர்.
விழாவில் திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணியதேசிகர் குருபூஜை விழாவில் பங்கேற்று ஆசி வழங்கினார். விழாவில் எஸ்.திருநாவுக்கரசு பிள்ளை, பொறியாளர் சொ.கார்த்திகேயன், ஸ்ரீகுருஞானசம்பந்தர் பணி மன்றத் தலைவர் கு.சேதுசுப்பிரமணியன், உ.வெங்கடேசதீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...