அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் அருகே கிராம உதவியாளர் கொலை!

சிதம்பரம் அருகே உள்ள பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு (45). கிராம உதவியாளராக பணியாற்றும் இவரது வீடு அருகே இன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த குமார்

News image
Updated On :12 ஜூன் 2013, 10:19 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே ஆடு மேய்த்த தகராறில் கிராம உதவியாளர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே உள்ள பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு (45). கிராம உதவியாளராக பணியாற்றும் இவரது வீடு அருகே இன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த சண்முகவேலு, குமாரிடம் ஆடு எப்படி இங்கு வந்து மேயலாம் எனக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தாகராறில் குமார் தாக்கியதில் சண்முகவேலு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து குமாரை (35) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.