அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அண்ணாமலைப் பல்கலை. மருத்துவ மாணவர்கள் சிறந்த மருத்துவ சேவையை சமூகத்திற்கு அளிக்க வேண்டும்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளின் 2013-14 ஆண்டிற்கான முதுகலை பட்ட மற்றும் பட்டய வகுப்புகளை பல்கலை நிர்வாகியும்,

News image
Updated On :14 ஜூன் 2013, 9:03 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் சிறந்த மருத்துவ சேவையை சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என மருத்துவ முகுகலை மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா அறிவுறுத்தினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளின் 2013-14 ஆண்டிற்கான முதுகலை பட்ட மற்றும் பட்டய வகுப்புகளை பல்கலை நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

ராஜா முத்தையா மருத்துவகல்லூரியின் அனைத்து நவீன வசதிகள், அதி நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளிருக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை ஆகிய வசதி வாய்ப்புகளை மாணவர்கள் தங்களுடைய பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் சிறந்த மருத்துவ சேவையை சமூகத்திற்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் தலைமை வகித்தார். ராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிடேவிட் ஆஸ்டின் வரவேற்றார். பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், விடுதிகள் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.ஆக்.சங்கரன், பெற்றோர்கள் சார்பில் எல்.பாலசுப்பிரயணியன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன் நன்றி கூறினார். முதுகலை மருத்துவ படிப்பிற்கு 103 மாணவ, மாணவியர்களும், முதுகலை பல் மருத்துவப் படிப்பிற்கு 22 மாணவர்களும் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.