சிதம்பரம் குளத்தில் பொதுமக்களிடம் சிக்கிய முதலை
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ஜம்புகுளம் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் இக்குளத்தில் கொத்தங்குடிதோப்பைச் சேர்ந்த கணேசன், சுரேஷ் ஆகிய இருவரும் மீன்பிடிக்க சிறுவலையை குளத்தில் விரித்து


சிதம்பரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தில் சிக்கிய முதலை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ஜம்புகுளம் உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் இக்குளத்தில் கொத்தங்குடிதோப்பைச் சேர்ந்த கணேசன், சுரேஷ் ஆகிய இருவரும் மீன்பிடிக்க சிறுவலையை குளத்தில் விரித்து விட்டு சென்றனர். இன்று காலை 6 மணிக்கு வந்து வலையை இழுத்த போது அதில் 5 அடி நீளமுள்ள முதலை சிக்கியுள்ளதை கண்டனர். பின்னர் அப்பகுதி மக்கள் ஒன்று முதலையை கட்டிப்போட்டு எடுத்துச் சென்று அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அளித்த தகவல் பேரில் வனவர் மணி தலைமையில் வனத்துறையினர் சென்று முதலையை மீட்டு சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர்தேக்க குளத்தில் முதலையை கொண்டு விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...