அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூங்கிக் கொண்டிருந்த நபருக்கு கத்திக்குத்து!

சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரஅரசு (35). இவரது மனைவி ரதிதேவி சனிக்கிழமை இரவு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு வீரஅரசு மட்டும் தனியாக படுத்து

News image
Updated On :16 ஜூன் 2013, 12:49 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபரை, இரு மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரஅரசு (35). இவரது மனைவி ரதிதேவி சனிக்கிழமை இரவு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு வீரஅரசு மட்டும் தனியாக படுத்து தூங்கியுள்ளார். அப்போது இரு மர்ம நபர்கள் வீட்டின் பின்புறக்கதவை உடைத்து உள்ளே புகுந்து மின்சப்ளையை துண்டித்து வீரஅரசை கத்தியால் சரமாரியாக குத்துவிட்டு தப்பிஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் வீரஅரசை அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக வீரஅரசு புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வீரஅரசின் மனைவி ரதிதேவி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் (பொறுப்பு) போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.