அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிதம்பரம் அருகே தீவிபத்து: 7 வீடுகள் எரிந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசம்

சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தில் இன்று காலை அஞ்சாபுலி என்பவரது வீட்டில் மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீ அருகாமையில் உள்ள

News image
Updated On :17 ஜூன் 2013, 10:16 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே தீவிபத்தில் 7 வீடுகள் எரிந்து சேதமுற்றன. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமுற்றன.

சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தில் இன்று காலை அஞ்சாபுலி என்பவரது வீட்டில் மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீ அருகாமையில் உள்ள வீடுகளில் பரவி சங்கர், நாகராஜன், அமாவாசை, சாமிநாதன், முருதாயி, பரமேஸ்வரன் ஆகியோரது வீடுகளும் எரிந்து சேதமுற்றன. தகவல் அறிந்த சிதம்பரம் மற்றும் சேத்தியாத்தோப்பு பகுதிகளிலிருந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இத்தீவிபத்தில் சங்கர் என்பவரது வீட்டில் அவரது மகள் ஷர்மிளாவிற்கு வருகிற ஜூன் 26-ம் தேதி பெருவரப்பூர் மணமகன் வீட்டில் நடைபெற இருந்த திருமணத்திற்காக வைத்திருந்த  நகைகள், வெள்ளி பொருள்கள் மற்றும் சீர்வரிசை பொருள்கள் எரிந்து சேதமுற்றதாக தெரிகிறது. தீவிபத்தில் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள்  நாசமாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.