அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அண்ணாமலைப் பல்கலையில் இளங்கலை பட்டப்படிப்பு தொடங்க கோரிக்கை

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதி பற்றாக்குறையால் நிலைகுலைந்த போது தமிழகஅரசு தலையிட்டு அரசுடைமையாக்கப்பட்டதை ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்கிறது. கடந்த காலங்களில் இப்பல்கலைக்கழகத்தில்

News image
Updated On :18 ஜூன் 2013, 12:02 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு தொடங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பு மாநில இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதி பற்றாக்குறையால் நிலைகுலைந்த போது தமிழகஅரசு தலையிட்டு அரசுடைமையாக்கப்பட்டதை ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்கிறது. கடந்த காலங்களில் இப்பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்புகள் இருந்த போது மாணவர்கள் பலர் படித்து பல்வேறு உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். ஆனால் பின்னர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்புகள் மூடப்பட்டன.

இந்நிலையில் 2002-ம் ஆண்டு ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது. இதில் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து படித்து முடித்து அரசு வேலைக்கு எவ்வித உத்தரவாதமின்றியும், அரசு நேர்முகத்தேர்வு வரை சென்று தகுதியில்லை என திருப்பி அனுப்பப்பட்டும் அவல நிலை தொடர்கிறது. ஆகையால் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பை ரத்து செய்து மீண்டும் மூன்றாண்டு இளங்கலை மற்றும் அறிவியல் பட்ட வகுப்புகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.