விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து ஒருவர் பலி

பழனி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து ஒருவர் பலியானார்.

News image
Updated On :18 ஜூன் 2013, 5:48 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்து ஒருவர் பலியானார்.

    பழனி புதுநகரை சேர்ந்தவர் மனோகரன் மகன் சுரேஷ்கண்ணா(42).  இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.  பழனி-தாராபுரம் சாலையில் தொப்பம்பட்டி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி முன்பு இருந்த வேகத்தடையில் வேகமாக ஏறியபோது மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.  உடனடியாக 108 வாகனம் மூலமாக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்து போனார். இதுகுறித்து அவரது சகோதரர் மகேந்திரன்(44) கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.