அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜூன் 21 முதல் சிதம்பரம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு!

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன்

News image
Updated On :19 ஜூன் 2013, 12:59 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வு விபரம்: ஜூன் 21- சிறப்பு பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளி, விளையாட்டுத்திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி, மலைவாழ் பிரிவினர்); 24-ம் தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல்; 25-ம் தேதி- பிஎஸ்சி இயற்பியல், பொதுவேதியியல்; 26-ம் தேதி -பிஎஸ்சி தொழிற் வேதியியல், விலங்கியல், தாவரயியல்; 27-ம் தேதி- பி.ஏ.தமிழ், ஆங்கிலம்; ஜூலை 1-ம் தேதி- பி.காம்., பி.பி.ஏ.,; ஜூலை 2-ம் தேதி- பி.ஏ பொருளியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள்.

மேற்கண்ட பாடப்பிரிவுகளில் பிஏ தமிழ், ஆங்கிலம் தவிர ஏழைய பாடப்பிரிவுகளில் முதல் கட்ட கலந்தாய்வில் பிளஸ்டூ தேர்வின் பகுதி-3ல் 800க்கு மேலும், தமிவ் பாடப்பிரிவிற்கு பகுதி-3ல் சிறப்புத் தமிழ் படித்தவர்கள் அல்லது பகுதி-1 தமிழில் 120க்கும் மேலும், பி.ஏ ஆங்கில பாடப்பிரிவிற்கு பகுதி-2 ஆங்கிலத்தில் 120-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.