அண்ணாமலைப் பல்கலைக்கழக 2013-14 கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஇ., பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 7,8,9 தேதிகளில் தமிழகத்தில் 7 நகரங்களில் நடைபெற்றது. சுமார் 22500 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். இதில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தாள்கள் ஒஎம்ஆர் கணினி முறைகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் மற்றும் தர வரிசைப் பட்டியல் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதள முகவரியான www.annamalaiuniversity.ac.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிசீட்டு எண்: (Hall ticket No) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றின் மூலம் இணையதளத்தில் தங்களது மதிப்பெண் மற்றும் தரவரிசை பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழகஅரசு இடஒதுக்கீட்டு விதி மற்றும் தரவரிசை அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும். கலந்தாய்வுக்கான நாள் மற்றும் நேரம் மாணவர்கள் விணப்பிக்க வேண்டிய முறை, சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றை அவ்வபோது பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி மற்றும் இதர விபரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.