மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
பழனியில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.


பழனியில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார். பழனி அருகே புதுஆயக்குடியை சேர்ந்தவர் பிரேம்ராஜ் மகன் துரைராஜ்(22). இவர் சனிக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்ப எடுக்க வந்தபோது கொடைக்கானல் குறிஞ்சிநகரை சேர்ந்த தர்மதுரை(20) என்பவர் மோட்டார்சைக்கிளை திருடி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து துரைராஜ் அவரை கையும், களவுமாக பிடித்து பழனி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் தர்மதுரை மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...