கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் சாவு

 சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

News image
Updated On :15 மார்ச் 2013, 1:57 pm

ஜி.சுந்தரராஜன்

 சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

சிதம்பரம் அருகே வத்தவராயன்தெத்து கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (30). சவுதியில் லேபராக பணியாற்றும் இவர் கடந்த 15 தினங்கள் முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு வந்து பொருள்கள் வாங்கிக் கொண்டு வத்தவராயன்தெத்து கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது வண்டுராயன்பட்டு எனுமிடத்தில் மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள பனை மரத்தில் மோதி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே செல்வம் இறந்தார். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.