ஏப்.1-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திறப்பு
மாணவர்கள் போராட்டத்திற்கு பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மார்ச் ஏப்.1-ம் தேதி திறக்கப்படுகிறது என பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார்.


மாணவர்கள் போராட்டத்திற்கு பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மார்ச் ஏப்.1-ம் தேதி திறக்கப்படுகிறது என பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் படுகொலை குறித்து மாணவர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் வேளாண் புல வகுப்புகளுக்கு காலவரையற்றி விடுமுறை கடந்த மார்ச் 13-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல், கடல்வாழ் உயிரினம், இந்திய மொழியியல், கல்வியியல் ஆகிய புலங்கள், இசைத்துறை மற்றும் பொறியியல் புல மாணவ, மாணவிய்ர்களுக்கு ஏப்.1-ம் தேதி திங்கள்கிழமை முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படும். வேளாண்புல மாணவ, மாணவியர்களுக்கு வரும் மார்ச் 28-ம் தேதி வியாழக்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...