பாலியல் தொந்தரவு: காட்டுமன்னார்கோயில் தனியார் பள்ளி ஆசிரியர் கைது
காட்டுமன்னார்கோயில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.


காட்டுமன்னார்கோயில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
காட்டுமன்னார்கோயில் வளையல்காரத்தெருவில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஒன்று உள்ளது. இப்பள்ளியில் அரியலூர் மாவட்டம் தென்னூரைச் சேர்ந்த செபஸ்டியன் (36) என்பவர் தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 8-ம் வகுப்பு மாணவியர்களுக்கு பாலியல் தொந்ததரவு கொடுத்ததாகவும், வகுப்பறையில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் புகார் எழுந்ததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகத்தால் அவர் பணிநீ்க்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மாணவியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக வழக்குரைஞர் புகழேந்தி காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காட்டுமன்னார்கோயில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் செபஸ்டியனை திங்கள்கிழமை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...