சிதம்பரம் அருகே மீன்வியாபாரி வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு
சிதம்பரம் அருகே புவனகிரியில் வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து 8 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.


சிதம்பரம் அருகே புவனகிரியில் வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து 8 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
சிதம்பரம் அருகே உள்ள கீழ்புவனகிரி பருவதராஜ குலத்தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (47). மீன் வியாபாரியான இவர் கடந்த மார்ச் 27-ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு புதுச்சேரியில் உள்ள தனது மைத்துனர் சாவிற்கு சென்றுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து பீரோவிலிருந்து 8 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரி்ன் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...