சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனுவாசன் மனைவி அம்பிகா (50). இவரும் அதே தெருவைச் சேர்ந்த கலைவாணி (35) ஆகிய இருவரும் தினமும் புறவழிச்சாலையில் நடைபயற்சி செல்வது வழக்கம். இன்று அதிகாலை புறவழிச்சாலையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து திருத்துறைபூண்டி நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அப்பெண்கள் மீது மோதியது. இவ்விபத்தில் அம்பிகா படுகாயமுற்று இறந்தார். மற்றொருவரான கலைவாணி காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.