அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரயிலில் முதல்வகுப்பில் பயணம் செய்து பயணியிடம் நகைகள் திருடிய முதியவர் கைது

திருச்சி பொன்மலை கீழ்கண்டார்கோட்டையைச் சேர்ந்த கல்யாணராமன் (75). இவர் சென்னை மீஞ்சூர் பாப்பாத்திநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி சென்னை சேப்பாக்கம் பிரகாஷ்ராஜ் (71) என்ற பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இவர் சென்னை- காரைக்கால், கும்பகோணம்,

News image
Updated On :5 மே 2013, 10:42 am

G.Sundararaj

போலி அடையாள அட்டை கொண்டு ரயில்களில் முன்பதிவு செய்து முதல்வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளிடம் நகைகள் மற்றும் பொருள்கள் திருடிய முதியவரை சிதம்பரம் ரயில்நிலையத்தில் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி பொன்மலை கீழ்கண்டார்கோட்டையைச் சேர்ந்த கல்யாணராமன் (75). இவர் சென்னை மீஞ்சூர் பாப்பாத்திநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி சென்னை சேப்பாக்கம் பிரகாஷ்ராஜ் (71) என்ற பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். இவர் சென்னை- காரைக்கால், கும்பகோணம், பெங்களூர், காட்பாடி, கோயம்புத்தூர், பங்காரப்பேட்டை, ஆந்திரா செல்லும் ரயில்களில் முதல்வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்து பயணிகளுடன் பயணியாக பயணம் செய்து, பொருள்களையும், நகைகளையும் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் திருச்சி ரயில்வே போலீஸ் சூப்ரண்டன்ட் கயல்விழி, துணை போலீஸ் சூப்ரண்டன்ட் ராஜவேல் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், அக்பர்கான் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படை அமைத்து கல்யாணராமனை தேடி வந்தனர்.

இந்நிலையில் சிதம்பரம் ரயில்நிலையத்தில் புத்தகக்கடை முன்பு இன்று காலை கல்யாணராமன் நின்று கொண்டிருப்பதாக தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த போலி அடையாள அட்டையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 1-5-2013 அன்று சிதம்பரம்-காரைக்கால் சென்ற ரயிலில் பயணம் செய்த ஸ்டேஷன் மாஸ்டர் மோகன்ராஜ் (52) என்பவரது பையை திருடியுள்ளார். அதில் செல்போன் மற்றும் துணிமணிகள் மட்டும் இருந்துள்ளது. அதன்பின்னர் 6-2-2013 அன்று ஹவுரா-கன்னியாக்குமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அமீத்குமார் (53) என்ற பயணியிடம் 107 கிராம் தங்க நகைகளை திருடியதும், 10-4-2013 அன்று சென்னை கம்பன் எக்ஸ்பிரஸ் ரயலில் பயணம் செய்த ஐசக் (52) என்ற பயணியிடம் லேப்டாப் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீஸார் கல்யாணராமன் கொடுத்த தகவலின் பேரில் 107 கிராம் தங்கத்தையும், லேப்டாப்பையும் மீட்டனர்.

பலே ஆசாமி கல்யாணராமன் 2005-ம் ஆண்டு இதேபோன்று ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து பயணிகளிடம் நகைகள் திருடிய வழக்கில் 15 வருடம் சிறை தண்டனை பெற்றுள்ளார். பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர் 2008, 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ரயில்களில் திருடிய பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். இறுதியாக ஆந்திரமாநிலத்தில் 1-5-2012ல் தெனாலி ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளிவந்துள்ளார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, சென்னை மீஞ்சூர் பாப்பாத்திநகரில் அவரது வீட்டில் தற்போது கல்யாணராமன் வசித்து வருகிறார் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.