அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்மணி!

சிதம்பரத்தை அடுத்த மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மனைவி விஜயா (45). இவர் செவ்வாய்க்கிழமை மாலை வயல்வெளியில் மண்வெட்டியால் தோண்டி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இரண்டரை அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு அவரது மீது ஏறியுள்ளது. பாம்பு

News image
Updated On :7 மே 2013, 2:58 pm

G.Sundararaj

தன்னை கடித்ததாக கூறி பாம்புடன் பெண்மணி ஒருவர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரத்தை அடுத்த மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மனைவி விஜயா (45). இவர் செவ்வாய்க்கிழமை மாலை வயல்வெளியில் மண்வெட்டியால் தோண்டி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இரண்டரை அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு அவரது மீது ஏறியுள்ளது. பாம்பு தன்னை கடித்துவிட்டதாக கூறி பெண்மணி விஜயா அந்த பாம்பை சாக்கில் போட்டுக்கொண்டு பஸ்ஸில் ஏறி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் தன்னை இந்த பாம்புதான் கடித்தது என கான்பித்ததால் மருத்துவர் மற்றும் செவிலியர்கள், நோயாளிகள் அதிர்ச்சியுற்றனர்.

பின்னர் மருத்துவர்கள் பாம்பினை பிடித்து சாக்குப்பைில் போட்டு, விஜயாவினை பரிசோதனை செய்து பாம்பு கடிக்கவில்லை என்றும், மண்ணுளிப்பாம்பு கடித்தாலும் விஷம் கிடையாது என தெரிவித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மருத்துவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களை வரவழைத்து பாம்பினை ஒப்படைத்தனர். பெண்மணி பாம்புடன் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்ததால், அங்குள்ள நோயாளிகள் மத்தியில் பயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.