அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கொள்ளிடம் ஆற்றில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சடலம்!

நாகை மாவட்டம் உதயம் நகரைச் சேர்ந்த தங்கராஜ் (59). இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது நாகை மாவட்டம் மணல்மேடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காட்டுமன்னார்கோயில் அருகே

News image
Updated On :8 மே 2013, 12:26 pm

G.Sundararaj

காட்டுமன்னார்கோயில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது.

நாகை மாவட்டம் உதயம் நகரைச் சேர்ந்த தங்கராஜ் (59). இவர் இந்திய எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது நாகை மாவட்டம் மணல்மேடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காட்டுமன்னார்கோயில் அருகே வீரசோழபுரம் எனுமிடத்தில் கடலூர் மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜன் புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.