ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயிலில் வராக ஜெயந்தி விழா!
விஷ்ணு அவதார ஸ்தலங்களில் மூன்றாவதும், வைணவ திருக்கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகவும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோயில் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம்


சிதம்பரம் அருகே வராக அவதார ஸ்தலமான ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோயிலில் வராக ஜெயந்தி விழா நடைபெற்றது.
விஷ்ணு அவதார ஸ்தலங்களில் மூன்றாவதும், வைணவ திருக்கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகவும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோயில் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பூவராக ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பூவராக ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. உற்சவ மூர்த்தியான பூதேவி, ஸ்ரீசேவி சமேத யக்ஞவராகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் விழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...