அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அன்னையருக்கு பாதபூஜை செய்து அன்னையர் தினம் கொண்டாட்டம்!

நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவன மாணவ, மாணவியர்கள் அன்னைக்கு பாதபூஜை செய்து வழிபட்டனர். நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் அன்னையர்களுக்கு நினைவுப் பரிசுகளை அவர் வழங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் முன்னிலை வகித்து இலவச

News image
Updated On :11 மே 2013, 12:33 pm

G.Sundararaj

சிதம்பபம் ஆர்.கே.ஜி பவுன்டேஷன் மற்றும் வின்சாஃப்ட் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் இணைந்து அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியை மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் நடத்தியது.

நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவன மாணவ, மாணவியர்கள் அன்னைக்கு பாதபூஜை செய்து வழிபட்டனர். நகரமன்றத் தலைவர் நிர்மலாசுந்தர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் அன்னையர்களுக்கு நினைவுப் பரிசுகளை அவர் வழங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார் முன்னிலை வகித்து இலவச கணினி பயிற்சி பெற்ற 50 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஆர்.கே.ஜி பவுன்டேஷன் தலைவர் நிர்மலா கோதண்டராமன் வரவேற்றார். ரபியாபேகம், சித்ரா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சிதம்பரம் தகதிமிதா கலைக்குழு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வேதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொருளாளர் கெளரி கோதண்டராமன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். ஹேமலதா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.