ஆழ்வார்குறிச்சி அருகே நீரில் மின்சாரம் கசிந்து இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்தவர்களின் உறவினர்கள் புதன்கிழமை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பான்குளத்தில் கருணை ஆற்றில் குளிக்க சென்ற ஓட்டுநர்கள் ரமேஷ் (29), காமாட்சி (30) ஆகியோர் குடிநீர் திட்ட உறைகிணற்று மோட்டார் அறையில் இருந்து நீரில் கசிந்த மின்சாரம் தாக்கியதில் இறந்தனர். குடிநீர் திட்ட உறைகிணறு மோட்டார் அறையில் மின்சாரம் கசிவு இருப்பது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனராம்.இருந்தபோதிலும் ஊராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து ரமேஷ், காமாட்சி ஆகியோர் உயிரிழந்தனர். இதனிடையே புதன்கிழமை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் திரண்ட இறந்தவர்களின் உறவினர்கள் இந்த சம்பவத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும், உடலை வாங்க மறுத்து திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. பா. மணிமாறன், காவல் ஆய்வாளர்கள் பூமிநாதன், பொன்னுசாமி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் இறந்தவர்களின் உடல் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வருகை தந்த மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து குடிநீர் திட்ட பணியாளர்கள் பாப்பான்குளத்தை சேர்ந்த கடற்கரை மகன் பாலதண்டாயுதம் (25), சுப்பையா மகன் குமார் (35) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் சங்கரன் மகன் இசக்கியை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கல்வி உதவித் தொகைக்கான இணையதளங்கள்!

கல்லூரி விடுதிகள்கூட மூடப்படுகின்றன! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து கனிமொழி எம்.பி.

மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ்: மீண்டும் இந்தியச் சந்தையில்!
மஞ்சள் ஜெர்சியில் இது தோனிக்கு கடைசி சீசனாக இருக்கலாம்: இர்பான் பதான்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

