கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வடகிழக்கு பருவ மழை தொடங்கியது: சேர்வலாறு அணை நீர்மட்டம் 4 அடி உயர்வு

தாமிரவருணி பாசனத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 4

News image
Updated On :20 அக்டோபர் 2013, 12:18 pm

ஷேக் அப்துல்காதர்

தாமிரவருணி பாசனத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து ஞாயிற்றுக்கிழமை 91.37 அடியாக இருந்தது.

தாமிரவருணி பாசனத்தில் தென்மேற்கு பருவத்தில் கார் பருவ சாகுபடியும், வடகிழக்கு பருவத்தில் பிசான பருவ சாகுபடியும் செய்யப்படுகிறது. கார் பருவ சாகுபடி அறுவடை திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில தினங்களாக பெய்யும் மழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பாபநாசம் அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிசான பருவ சாகுபடிகளை தொடங்க வசதியாக விநாடிக்கு 600 கனஅடி தண்ணீ்ர் திறக்கப்பட்டது. சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மிதமான மழையால் அணைகளின் நீர்வரத்தில் மாற்றம் காணப்படுகிறது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 558.10 கனஅடி நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 81.00 அடியாக இருந்தது. அணையில் 8 மி.மீ மழையும் பாபநாசம் கீழ் அணையில் 16 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது. சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நீர்மட்டம் 4 அடி உயர்ந்து, 91.37 அடியாக இருந்தது. அணையில் 3 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 14.2 மி.மீ மழையும் பெய்துள்ளது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 51.53 அடியாக இருந்தது. அம்பாசமுத்திரத்தில் 14.3 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 8 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 53.60 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 54.00 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.