கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை, தூத்துக்குடியில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் அக். 31 ம் தேதி 50,000 மரக்கன்றுகள் நடப்படுகிறது என கிராம உதயம் இயக்குநர் வே. சுந்தரேசன்,

News image
Updated On :21 அக்டோபர் 2013, 11:32 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் அக். 31 ம் தேதி 50,000 மரக்கன்றுகள் நடப்படுகிறது என கிராம உதயம் இயக்குநர் வே. சுந்தரேசன், திங்கள்கிழமை தெரிவித்தார்.

கிராம உதயம் இயக்குநர் வே. சுந்தரேசன் கூறியதாவது:

கோபாலசமுத்திரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கிராம உதயம் தொண்டு நிறுவனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1042 கிராமங்களில் 1.45 லட்சம் குடும்பத்தினர் உறுப்பினராக உள்ளனர். வங்கி நிதி உதவி இல்லாமல் செயல்படும் இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு தொழில் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது.மக்களுக்கு வழங்கும் அரசு நலத் திட்டங்களை அமைப்பின் மூலம் பெற்று கொடுத்து வருகிறோம். இது தவிர கந்து வட்டியில் இருந்து மீட்பு பணிகள், மருத்துவ சேவைகள், கண் சிகிச்சை முகாம், தையல், கணினி பயிற்சி, வரதட்சனை ஒழிப்பு பணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான நல்வாழ்வுப் பணிகள் உள்ளிட்ட சமூக பணிகள் செய்து வருகிறோம்.

கிராம உதயம் அமைப்பின் சார்பில் இதுவரை 1.12 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அதில் 90 சதவிகத மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வரும் அக். 31 ம் தேதி (வியாழக்கிழமை) கிராம உதயம், கிரின் குளோப், விவேக்கின் மரம் வளர்க்கலாம் ஆகிய அமைப்பின் மூலம் 50,000 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

கோபாலசமுத்திரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்குகின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக 50,000 மரக்கன்றுகள் நடப்படும். வரும் டிசம்பர் 31 ம் தேதிக்குள் மேலும் 50,000 மரக்கன்றுகள் நடப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.