மத்திய அமைச்சர் சல்மான்குர்ஷித்தை கண்டித்து நெல்லை மாநகராட்சியில் திர்மானம்
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ள மத்திய அமைச்சர் சல்மான்குர்ஷித்தை கண்டித்து திருநெல்வேலி மாநகராட்சியில் திங்கள்கிழமை கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து


காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ள மத்திய அமைச்சர் சல்மான்குர்ஷித்தை கண்டித்து திருநெல்வேலி மாநகராட்சியில் திங்கள்கிழமை கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் விஜிலா சத்யானந்த் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூ. ஜெகநாதன், ஆணையர் த. மோகன், மண்டலத் தலைவர்கள் எம்.சி. ராஜன், கே. மாதவராமானுஜம், எஸ்.கே.ஏ. ஹைதர்அலி, ந. மோகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் நன்றி தீர்மானங்களை மேயர் வாசித்தார். இதையடுத்து காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக மத்திய அமைச்சர் சல்மான்குர்ஷித், அறிவித்திருப்பதற்கு கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உறுப்பினர் உமாபதிசிவன் ஆட்சேபம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...