இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பேருந்து-லாரி மோதல்: ஒருவர் சாவு: 5 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :23 நவம்பர் 2014, 6:15 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மூன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்துக் கழக அலுவலகத்தை அடுத்து பேருந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரே மதுரையிலிருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி பேருந்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. லாரி எதிர் புறத்திலிருந்த மரத்தில் மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த நெல்லை மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரில் சேவுக்கடை வைத்துள்ள க.முப்பிடாரி (24) என்பவர் உயிரிழந்தார். இவருடன் வந்த இவரது தம்பி சரவணக்குமார், ராஜபாளையம் துப்புரவு தொழிலாளர் பேச்சியம்மாள், அரசு பேருந்து ஓட்டுநர் முருகன் (42), நடத்துனர் சங்கர் (40) ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த மதுரை மாவட்டம், சோழவந்தான் தாலுகா விக்ரமங்கலத்தைச் சேர்ந்த விஜயன் (30) என்பவர் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் முருகன், வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் லாரி டிரைவர் விஜயன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்தினால், ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் குறைந்த அளவே பயணிகள் இருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக போலீஸார் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.