ராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வியாழக்கிழமை மதிய உணவு இடைவேளையின் போது பள்ளிக்கு வெளியே நின்று பேசிகொண்டிருந்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த சுமை ஆட்டோவிலில் ஏற்றி வந்த நிலக்கடலை மூட்டை ஒன்று சாலையில் தவறி விழுந்துள்ளது, இதை கண்ட பள்ளி மாணவர்கள் சத்தம் எழுப்பியள்ளனர். ஆனால் வண்டி நிற்காமல் வேகமாக சென்றுள்ளது, பின்னர் மாணவர்கள் பள்ளி உதவி தலைமையாசிரியர் வேலுச்சாமிக்கு தகவல் அனுப்பி அவரின் உதவியுடன் நிலக்கடலை மூட்டையை இலுப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த நார்த்தாமலை அருகே உள்ள கருப்பாடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மாரியப்பனிடம் நிலக்கடலை மூட்டை ஒப்படைக்கப்பட்டது.