ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை சரளபட்டியில் அனுமதியின்றி மதுவிற்ற இருவர் கைது

விராலிமலை அருகே உள்ள சரளபட்டியில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :11 ஏப்ரல் 2015, 11:53 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே உள்ள சரளபட்டியில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சரளபட்டி பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம்( டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்பகுதிகளில் சனிக்கிழமை காவல் ஆய்வாளர் அ.மா. செந்தில்மாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி மற்றும் போலிஸார் சோதனையில் ஈடுபட்டனர், அதனைத்தொடர்ந்து சரளபட்டி பகுதி பெட்டிக்கடைகளில் அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த கவரப்பட்டி து. பழனிவேல்(41) ஏ. ராமசாமி(37)  ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 10 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.