ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சி. உதயகுமார்

விராலிமலை திருச்சி நான்கு வழிச்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடிப் பொருட்களை ஏற்றி வந்த லாரி தீப்பற்றி எரிந்ததால், திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

சிவகாசியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையிலிருந்து வியாழக்கிழமை பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்த லாரி விராலிமலை நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்த போது, லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்து  தீப்பற்றி எரிந்தது. சாலையின் நடுவே ஏற்பட்ட இந்த தீவிபத்தினால்  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணிநேர போரட்டத்துக்கு பின் தீயையணைத்தனர். விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் தலைமையில் போலிஸார் போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநர் சிறுகாயங்களுடன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.