இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய அரிமா சங்கம் தொடக்க விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதியதாக, லயன்ஸ் கிளப் ஆப் ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆளுநர் சிவகாமி எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :26 ஏப்ரல் 2015, 6:38 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதியதாக, லயன்ஸ் கிளப் ஆப் ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆளுநர் சிவகாமி எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம், செயலாளர் டி.கந்தசாமி, பொருளாளர் டி.திருப்பதிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு டி.தியாகராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பட்டய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு பி.ஏ.பி.ராஜூ பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்க பட்டயத் தலைவர் டி.ஏ.எஸ்.ராமஸ்வாமி, நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, தொடக்க கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

பதவியேற்றபின் பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் புதிய அரிமா சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். மேலும் ஏழைகள், ஆதரவற்றோர், வறுமையில் உள்ளோருக்கு மருத்துவம், கல்வி உள்ளவற்றில் வழிகாட்டி, அரசின் திட்டங்கள் அவர்களைச் சென்றடைந்து, அவர்கள் மேம்பாட்டிற்கு உதவும் என்றார்.

சங்கத்தின் பொறுப்புகளில் வழக்குரைஞர் ஆர்.முருகன், எம்.பாலசுப்பிரமணியன், எஸ்.பி.சுகுமாறன், பி.அங்குராஜ், ஆர்.கண்ணன், ஜி.சந்திரன் (எ) நாகராஜ் ஆகியோரும், இயக்குநர்களாக ஜி.கார்த்திக், எஸ்.எம்.ரவிசங்கர், எஸ்.ஜெயகிருஷ்ணன், டி.பாஸ்கர், ஜி.குருமுருகன், ஏ.குமாரவேல்சாமி ஆகியோர் பொறுப்பேற்றனர்.

சங்கத்தின் பல்வேறு சேவைகளின் தலைவர்களாக எல்.குழந்தைவேலு, எஸ்.கார்த்திகேயன், கே.ராமசுப்பிரமணியன், எஸ்.செல்வராஜ், பி.முருகன் ஆகியோர் பொறுப்பேற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அரிமா சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.