இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழக அரசு முத்திரைச் சின்னம்: மஹா சம்ப்ரோஷன விழா முன்னேற்பாடு கூட்டம்

தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக திகழும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடப்தர சயனர் திருக்கோவில் ராஜகோபுரம் மஹா சம்ப்ரோஷனம் மே மாதம் 22-ம் தேதி

News image
Updated On :30 ஏப்ரல் 2015, 1:31 pm

கோ.ஜெயக்குமார்

தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக திகழும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடப்தர சயனர் திருக்கோவில் ராஜகோபுரம் மஹா சம்ப்ரோஷனம் மே மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது.

அருள்மிகு வடபத்ர சயனர் திருக்கோவில் ராஜகோபுரத்திற்கு 18.5.15 முதல் 21.5.15 வரை யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மஹா சம்ப்ரோஷனம் நடைபெறுகிறது.இவ்விழாவை எவ்வித அசம்பாவிதங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் இன்றி நடத்துவது குறித்தும், விழாவிற்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பக்தர்களை ஒழுங்குபடுத்துதல், காவல் கட்டுப்பாட்டு அறை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு அமைப்பது, பொதுமக்கள் நெரிசல் மற்றும் வாகனங்கள் ஒரே இடத்தில் சேரவிடாமல் போக்குவரத்தை சீர்செய்வது தொடர்பான திட்ட அறிக்கை தயாரித்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளித்தல், நோய்த் தொற்று பரவாமல் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார்.

ஆம்புலன்ஸ், விழா நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழு தயார் நிலையில் போதிய மருத்துவர்களுடன் இருத்தல், தீயணைப்புப் படையினரை நிறுத்துதல், வெளிமாநில மற்றும் வெளி நாட்டு பக்தர்களுக்கு கோவில் குறித்த தகவல்களைத் தெரிவிக்க தகவல் மையம் அமைத்தல், சிறப்பு பேருந்துகள் இயக்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆட்சித் தலைவர் ஆலோசனை நடத்தினார்.

21 மற்றும் 22-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுவது, 22-ம் தேதி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடுவது என்றும் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி, சிவகாசி சார் ஆட்சியர் அமர்குஷ்வாஹா, கோவில் தக்கார் கே.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.