விராலிமலையில் மார்கழி மாத 2001- மகாகுத்துவிளக்கு பூஜை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்பாள் கோயிலில் மார்கழி மாத 2001- மகாகுத்துவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்பாள் கோயிலில் மார்கழி மாத 2001- மகாகுத்துவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
விராலிமலை அருள்மிகு மெய்க்கண்ணுடையாள் கோயில் வரலாற்று சிறப்பு பெற்ற தலமாகும், இக்கோயிலில் வருடம் தோறும் மார்கழி மாதத்தில் வரும் முதல் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கு 2001 மகாகுத்துவிளக்கு பூஜை தொடங்கி மாதம் முழுவதும் வரும் செவ்வாய்- வெள்ளிக்கிழமைகளில் மெய்க்கண்ணுடையாள் அம்பாளுக்கு வெள்ளிக்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை அலங்காரங்களுடன் குத்துவிளக்கு பூஜை வழிபாடு தொடங்கி தைமாதம் முதல் நாள் நிறைவடைவது வழக்கம்.
இப்பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு குடும்ப நலம், திருமணமாகாத கண்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதனால் மார்கழி மாதம் குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார்கள்.
நிகழாண்டுக்கான குத்துவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கியது இதில் 2001 -க்கும் அதிகமான மகளிர்கள் பங்கேற்று குத்துவிளக்கு வழிபாடு நடத்தினர்.
விழாவை விராலிமலை ஒன்றியக்குழுத்தலைவர் எம். சுப்பையா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், விழவில் ஏ. கே. சுந்தரம், ஜெ. ஆர். அய்யப்பன், எல். ராஜேஸ்கண்ணா, தீபண்சக்கரவர்த்தி, எஸ். செந்தில், வி. முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை விழாகமிட்டித்தலைவர் ஏ. கே. சுந்தரம் செய்து வருகிறார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...