இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரசு தேர்வில் 100 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தான் கற்றுக் கொடுத்த சமூகவியல் பாடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கி கௌரவித்தார் அரசுப் பள்ளி

News image
Updated On :3 பிப்ரவரி 2015, 11:52 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, தான் கற்றுக் கொடுத்த சமூகவியல் பாடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கி கௌரவித்தார் அரசுப் பள்ளி ஆசிரியர் முருகன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளூர்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளி நடப்பு ஆண்டுதான் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப் பள்ளியில் கடந்த ஆண்டு சமூகவியல் பட்டதாரி ஆசிரியராக முருகன் பணி புரிந்தார். தற்போது இவர் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியராக பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

கிராமத்தில் தான் 2013-14-ம் கல்வியாண்டில் கற்றுக் கொடுத்த மாணவர்கள் சிவக்குமார், சிவசுப்பிரமணியன், காளீஸ்வரபாண்டியன், நித்யா, சொர்ணலட்சுமி ஆகிய 5 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் சமூகவியல் பாடத்தில் 100-க்கு 100 எடுத்ததையடுத்து அவர்களை கௌரவிக்க நினைத்த ஆசிரியர் முருகன் தான் பதவி உயர்வில் சென்றாலும், மீண்டும் பள்ளிக்கு வந்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்கள் 5 பேருக்கும் தலா ரூ.1000 வழங்கி கௌரவித்தார்.

ஆசிரியரின் இந்தச் செயலை தலைமை ஆசிரியை ஜெயா கிறிஸ்டிபாய், மல்லி ஊராட்சி மன்றத் தலைவி முத்தம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

பொதுவாக ஆசிரியர்கள் தாங்கள் நிரந்தரமாக பணிபுரியும் பள்ளியில் கூட இதுபோல செய்வது கிடையாது. ஆசிரியர் முருகன் மாறுதலாகிப் போனாலும் மாணவர்கள் மீது கொண்ட பற்றுதலால் இதுபோன்ற ஊக்கத்தைக் கொடுத்து ஆசிரியர் சமுதாயத்திற்கு முன்னோடியாக திகழ்கிறார் என்று மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணுதாஷ் ஆசிரியரைப் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.