சிதம்பரத்தில் இருதரப்பினரின் நாட்டியாஞ்சலி விழா
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை


சிதம்பரத்தில் இந்த ஆண்டு இரு தரப்பினரின் நாட்டியாஞ்சலி விழா வெவ்வேறு இடங்களில் மகா சிவராத்திரியன்று தொடங்கி நடைபெறுகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து அழைப்பிதழ் அடித்துள்ளனர். இதனால் வருகிற பிப்.17-ம் தேதி தீட்சிதர்கள் நடத்தும் நாட்டியாஞ்சலி விழா கோயிலுக்குள்ளும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நடத்தும் நாட்டியாஞ்சலி விழா தெற்குவீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்திலும் நடைபெறுகிறது..
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இச்சிறப்பு வாய்ந்த நாட்டியாஞ்சலி விழா 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மூலம் கடந்த 2014-ம் ஆண்டு வரை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், செயலாளர்கள் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம்,ஆர்.நாகசாமி, இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.
நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டு (2015) முதல் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் உலகப்புகழ் பெற்ற நாட்டிய அஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சியை தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் என்ற பெயரில் கோயில் பொதுதீட்சிதர்களே நடத்த முடிவு செய்து அறிவித்து அழைப்பிதழ் அடித்துள்ளனர். நாட்டியாஞ்சலி விழா வருகிற பிப்.17-ம் தேதி மகாசிவராத்திரியன்று தொடங்கி 5 நாட்கள் நடத்துவது என்றும், கோயில் விதிமுறைப்படி தினமும் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை நாட்டியாஞ்சலியை நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 33 ஆண்டுகளாக நடனக்கலைஞர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர், 2015-ம் ஆண்டு நாட்டியாஞ்சலியை கோயிலுக்குள் நடத்த அனுமதி கோரி பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதரிடம் கடிதம் அளித்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் வருகிற பிப்.17-ம் தேதி சிவராத்திரி முதல் 5 நாட்கள் தெற்குரதவீதியில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் (வி.எஸ்.டிரஸ்ட் இடத்தில்) நாட்டியாஞ்சலி விழா நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த ஆண்டு நாட்டியாஞ்சலி இருதரப்பினரால் தனி, தனியே நடத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...