அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே சாதி மோதல்: இருவர் காயம்: 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு சமுதாய மாணவர்களிடையேயுள்ள முன்விரோதத்தில் நடைபெற்ற


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு சமுதாய மாணவர்களிடையேயுள்ள முன்விரோதத்தில் நடைபெற்ற மோதலில் இரு மாணவர்கள் காயமுற்றனர். பிரச்னை தொடர்பாக இரு பிளஸ் 2 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு குறிப்பிட்ட இரு சமுதாய மாணவர்களிடையே நீண்ட காலமாக விரோதம் இருந்து வருகிறது.
கடந்த வாரம் ராமசாமியாபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த பரஞ்ஜோதி மகன் வசந்தகுமாரும், எஸ்.கொடிக்குளம் கருப்பசாமிக்கும் பள்ளியில் பிரச்னை ஏற்பட்டு மோதல் நடைபெற்றுள்ளது. இதனை பள்ளியில் வைத்து பேசி முடித்துள்ளார்கள்.
இதனால் இப் பள்ளியில் படிக்கும் ராமசாமியாபுரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர்களுக்கும் கருப்பசாமியின் நண்பர்களுக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பள்ளி நுழைவாயில் அருகே பிளஸ் 2 படிக்கும் கருப்பசாமியன் நண்பரான கிழவன்கோவில், கர்ணன் மகன் விருமாண்டி (17) என்பவர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது பள்ளியிலிருந்து வந்து கொண்டிருந்த பிளஸ் 2 மாணவர் ராமசாமியாபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த பாண்டியன் மகன் ஈஸ்வர் (17) என்பவரிடம் விருமாண்டி, நீ என்ன பெரிய ரவுடியா? என கேட்டு ஆபாசமாகப் பேசினாராம். மேலும் வழிமறித்து சைக்கிள் செயினால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் ஈஸ்வர் கொடுத்த புகாரின் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் ஹென்றி அமலதாஸ், விருமாண்டியைக் கைது செய்தார்.
விருமாண்டி புகார்: இச் சம்பவத்தின் தொடர்ச்சியாக மாணவர் விருமாண்டி, கூமாப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், ஈஸ்வர் தன்னை வழிமறித்து கொடிக்குளத்துகாரன்கள் எல்லாம் பெரிய ரவுடியா என்று கூறி கையால் தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார். இதன் பேரிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...