ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டை உடைத்து 19 பவுன் நகைகள் கொள்ளை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டை உடைத்து 19 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.சிவகாசி தாலுகா, ஈஞ்சார்,


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டை உடைத்து 19 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.சிவகாசி தாலுகா, ஈஞ்சார், ராஜாநகரைச் சேர்ந்தவர் சி.தனபால் (60). இவர் வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றுள்ளார். சனிக்கிழமை இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டி மர்ம நபர்கள் உள்ளே சென்று, கதவை கம்பியால் நெம்பி உடைத்து உள்ளே சென்று, படுக்கை அறை கதவு பூட்டை உடைத்து உள்ளே இருந்த 19 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து மல்லி காவல் நிலையத்தில் தனபால் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்துச் சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...