கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி நிரம்பியது

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நீர்மட்டம் முழுக்கொள்ளவை தொட்டு நிரம்பி காட்சியளிக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீராணம்ஏரி முழுக்கொள்ளவை

News image
Updated On :8 பிப்ரவரி 2015, 12:14 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நீர்மட்டம் முழுக்கொள்ளவை தொட்டு நிரம்பி காட்சியளிக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீராணம்ஏரி முழுக்கொள்ளவை எட்டியது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம்ஏரி முழுக்கொள்ளளவு நிரம்பி காட்சியளிக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு ஆக.10-ம் தேதி மேட்டூரிலிருந்து கல்லணைக்கு நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து கடந்த ஆக.14-ம் தேதி நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் கீழணைக்கு ஆக.21-ம் தேதி வந்து சேர்ந்தது. அதன் பின்னர் கீழணையிலிருந்து ஆக.22-ம் தேதி முதல் படிப்படியாக வீராணம்ஏரிக்கு வடவாறு வழியாக நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு நீர் அனுப்பப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக ஏரியாக வீராணம்ஏரி திகழ்கிறது. இந்நிலையில் தற்போது வீராணம்ஏரிக்கு விநாடிக்கு 780 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை வீராணம்ஏரியின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 47.50 அடியை தொட்டு நிரம்பியது. ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 74 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.