முன்னதாக மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான சமூக போராளியான மேதாபட்கர் சிதம்பரத்தில் மீத்தேன் தி்ட்ட எதிர்ப்பு பரப்புரை இயக்கத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அணுஉலை போராட்டக்குழுவைச் சேர்ந்த கேபிரில்லா, லெனின், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், ஆலோசகர்கள் பொறியாளர் திருநாவுக்கரசு, மருத்துவர் பாரதிசெல்வன்,சாக்கோட்டை இளங்கோவன், தமிழத் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், சிதம்பரம் நகர அமைப்பாளர் கு.சிவப்பிரகாசம், தமிழர் தேசிய முன்னணி நிர்வாகிகள் கலைச்செல்வன், ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.