மேக்கே தாட்டுவில் முற்றுகை போராட்டம்: தமிழக உழவர் முன்னணி பங்கேற்க முடிவு
கர்நாடகம், காவிரியில் புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதை கண்டித்து மேக்கே தாட்டுவில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது என தமிழக உழவர் முன்னணி முடிவு செய்துள்ளது.


கர்நாடகம், காவிரியில் புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதை கண்டித்து மேக்கே தாட்டுவில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது என தமிழக உழவர் முன்னணி முடிவு செய்துள்ளது.
தமிழக உழவர் முன்னணி பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டத் தலைவர் கோ.சிவராமன் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கார்நாடகம் காவிரியில் மேக்கதாட்டு, ராசிமணல் என்ற இருஇடங்களில் புதிய அணைகளை கட்ட முயற்சிப்பதை தமிழக உழவர் முன்னணி கடுமையாக எதிர்க்கிறது. புதிய அணைகள் கட்டுவதை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு உடனே அமைக்க வலியுறுத்தியும் வருகிற மார்ச்.7-ம் தேதி மேக்கேதாட்டுவில் காவிரி உரிமை மீட்புக்குழு நடத்தவுள்ள முற்றுகை போராட்டத்தில் பெருந்திரளான விவசாயிகள்
பங்கேற்பது; மத்திய அரசு அறிவித்துள்ள நிலம் கைகயக்கப்படுத்தும் அவசர சட்டத்தை சட்டமாக்காமல் கைவிடும்படி தமிழக உழவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது;
உரியா காலத்தில் இறுதிதீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரைப்பெற தமிழகஅரசு நடவடிக்கை எடுக்காததாலும், முறையற்ற மழை காரணமாகவும் சராசரி விளைச்சலுக்கு பாதிக்கும் குறைவான விளைச்சல் கிடைத்ததாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதலால் தமிழகஅரசு அனைத்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...