இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெசவாளர் கூட்டுவு சங்கம் திடீர் முற்றுகை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெசவாளர்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கையை வலியுறுத்தி நெசவார் கூட்டுறவு சங்கத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இப் போராட்டம் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை அடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

News image
Updated On :13 பிப்ரவரி 2015, 1:35 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெசவாளர்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கையை வலியுறுத்தி நெசவார் கூட்டுறவு சங்கத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இப் போராட்டம் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை அடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம், அகத்தாபட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் 9 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 800 பேர் உறுப்பினர்களாக உள்ளார்கள். இவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா  சேலைகள் கைத்தறியில் நெய்வதற்கு நூல் வழங்கப்படும். இவர்கள் நெய்து கொடுத்த பின்னர் ஒரு சேலைக்கு ரூ.85 கூலியாக வழங்கப்படும்.
இந்நிலையில் அடுத்த ஆண்டுக்கான ரூ.4 லட்சம் மதிப்புள்ள சேலைகள் சுந்தரபாண்டியம் சங்கத்திற்கு வந்து இறங்கியுள்ளது. இவற்றை விசைத்தறியில் நெய்து கொண்டு வந்துள்ளார்கள். விசைத்தறியில் நெய்வதற்கு கூலி ரூ.45 ஆகும். ஆனால் கைத்தறியில் நெய்வதற்கு கூலி ரூ.85 ஆகும்.
தமிழக அரசு நெசவார்களின் நலன் காப்பதற்காகவும் கைத்தறியை ஊக்குவிக்கவும் இது போன்ற கூலியைக் கொடுத்து வருகிறது.

விசைத்தறியில் சேலைகள் நெய்யப்பட்டு கொண்டு வரப்பட்டதை அறிந்த நெசவாளர்கள் சுமார் 800 பேர் சுந்தரபாண்டியம் சங்கத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு கைத்தறிக்கான நூல் வழங்க வேண்டும். ஏற்கனவே நெய்ததற்கு கூலி வழங்க வேண்டும் என்று கோரி முற்றுகையிட்டனர். பின்னர் செயலாளர் ராஜசேகர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்த வாரத்திற்குள் நெசவுக்கு நூல் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இது குறித்து நெசவாளர்கள் கூறுகையில், அரசு நெசவாளர்களின் நலன் கருதி கைத்தறியில் நெய்வதற்குத் தான் நூல் வழங்குகிறது. கூலியும் அதிகமாக கொடுக்கிறது. ஆனால் இங்குள்ள அலுவலர்கள் மற்றும் சில சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டுச் சேர்ந்து அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் விசைத்தறியில் நெய்தால் ஒரு சேலைக்கு ரூ.40 மிச்சமாவதால், விசைத்தறியில் நெய்வதை, கைத்தறியில் நெய்ததாக கணக்கு காட்டி மோசடி செய்கிறார்கள். இவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு, நெசவாளர்களுக்கு விரோதமாய செயல்படும் அலுவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.